சுடச்சுட

  

  ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

  By புதுச்சேரி  |   Published on : 04th April 2014 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரும் கல்வி ஆண்டிலேயே புதுவை மாநில ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற புதுச்சேரி யூனியன் பிரதேச ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

  இது தொடர்பாக அதன் தலைவர் கோ.துளசி, அமைப்புச் செயலர் எஸ்.எட்வர்ட் சார்லஸ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆசிரியர்கள் நீண்ட காலமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு தமிழகப் பகுதியில் பணி அமர்த்தப்படுவதை மாற்றி புதுவையில் விடைத்தாள்கள் திருத்தும் மையத்தை முதன் முறையாகக் கொண்டு வந்துள்ளமைக்கு ஆசிரியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

  புதுவையில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளி வந்த 10 நாள்களுக்குள் பிளஸ்-1 சேர்க்கையை முடித்து வகுப்புகள் தொடங்க வேண்டும் என்பது பெற்றோர் எதிர்பார்ப்பாக உள்ளது.

  மேலும் 2014-15-ம் கல்வி ஆண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் காலியாக உள்ள முதல்வர், தலைமை ஆசிரியர்,விரிவுரையாளர், பட்டதாரி ஆசிரியர் போன்ற பதவிகளை, மே, ஜூன் மாதங்களிலேயே கலந்தாய்வு நடத்தி நிரப்பிட வேண்டும். இதற்குத் தடையாக உள்ள வழக்கு வரும் 9, 10 ஆகிய தேதிகளில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

  அன்றே இதற்கான தீர்ப்பைப் பெற கல்வித்துறை முயற்சி மேற்கொண்டு காலியாக உள்ள பதவிகளை நிரப்பி மாணவர்களின் கல்வித்தரம் உயர உதவ வேண்டும். 6-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி பட்டதாரி ஆசிரியர்களின் சீனியர், ஜூனியர் ஊதிய முரண்பாட்டை நீக்கி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். புதிதாக தொடங்க உள்ள கல்வி ஆண்டில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை கல்வித்துறை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai