சுடச்சுட

  

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்விசுவநாதன் சொத்து விவரம்

  By புதுச்சேரி  |   Published on : 04th April 2014 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி எம்.பி. தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.விசுவநாதன் தனது வேட்பு மனுவோடு தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் வருமாறு:

  2013-14-ல் விஸ்வநாதனின் தாக்கல் செய்த வருமானவரித் துறை அறிக்கையில் காட்டப்பட்ட வருவாய் ரூ.2,24,178 ஆகும். அவரது மனைவி அங்குலட்சுமி பெயரில் காட்டப்பட்ட வருவாய் ரூ.3,08,985 ஆகும்.

  விஸ்நாதன் கையில் உள்ள ரொக்கம் ரூ.50 ஆயிரம் ஆகும், மனைவி அங்குலட்சுமியிடம் ரூ.1 லட்சம் கையிருப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வங்கிகளில் விஸ்வநாதன் பெயரில் ரூ.64,090 சேமிப்பும், மனைவி அங்குலட்சுமி பெயரில் ரூ.26,827 சேமிப்பும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

  மேலும் ஆகாஷ் இன்டர்நேஷனல் ஓட்டலில் அங்குலட்சுமிக்கு 800 பங்குகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் தேசிய கடன் சேமிப்பு பத்திரங்கள், காப்பீடு நிறுவனங்களில் விஸ்வநாதன் பெயரில் ரூ.2,88,659-ம், மனைவி அங்குலட்சுமி பெயரில் ரூ.3,07,883-மும் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

  மேலும் ஆகாஷ் இன்டர்நேஷனல் ஓட்டல் தொடர்பாக அங்குலட்சுமி பெயரில் ரூ.72,46,052 லட்சம் கடன் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விஸ்வநாதன் பெயரில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள இரு சக்கர வாகனமும், அங்குலட்சுமி பெயரில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள காரும் உள்ளது. மேலும் விஸ்வநாதன் பெயரில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 5 சவரன் நகைகள், அங்குலட்சுமியிடம் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 30 சவரன் நகைகளும் உள்ளன.

  விஸ்வநாதன் தமது பெயரில் மொத்தம் ரூ.4,75,436 சொத்துக்களும், மனைவி அங்குலட்சுமி பெயரில் ரூ.84,60,762 சொத்துக்களும், கடன்களும் உள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினர் பெயரில் ரூ. 1.81 கோடி மதிப்பிலான வீடு, மனைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai