சுடச்சுட

  

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மனு தாக்கல்

  By புதுச்சேரி,  |   Published on : 04th April 2014 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி எம்.பி. தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.விசுவநாதன் வியாழக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

  புதுச்சேரி மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.விசுவநாதன், மாவட்ட ஆட்சியரும், தொகுதி தேர்தல் அலுவலருமான தீபக்குமாரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

  முன்னதாக காந்தி, அம்பேத்கர், சிங்காரவேலர், பெரியார், ஜீவா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். தியாகி ராமைய்யா, வ.சுப்பையா, கருணாஜோதி ஆகியோர் நினைவிடங்களிலும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் சுப்பையா சிலையிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றனர்.

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், கட்சி பிரதேச செயலர் வெ.பெருமாள், பார்வர்ட் பிளாக் மாநிலச் செயலர் முத்து, ஆர்.எஸ்.பி. செயலர் லெனின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மாதர் சம்மேளன பொதுச் செயலர் ஹேமலதா, இளைஞர் பெருமன்றம், வாலிபர் சங்கம், மாணவர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உடன் சென்றனர்.

  6 சுயேச்சைகள் மனு தாக்கல்:

  மேலும் எழிலரசன், ராமதாஸ், செந்தில்குமார், சைமன் சின்னபாபு, கே.மஞ்சினி, சஞ்சீவ்காந்தி ஆகியோர் தங்கள் வேட்பு மனுக்களை தேர்தல் அலுவலர் தீபக்குமாரிடம் தாக்கல் செய்தனர்.

  இதுவரை புதுவை தொகுதியில் மொத்தம் 14 பேர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai