சுடச்சுட

  

  "இறைச்சி வியாபாரிகள் ஆட்டை சாலையோரத்தில் வெட்டக் கூடாது'

  By காரைக்கால்,  |   Published on : 04th April 2014 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இறைச்சி வியாபாரிகள் ஆட்டை சாலையோரத்தில் வெட்டக் கூடாது எனவும், மீறி செயல்பட்டால் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென பஞ்சாயத்து ஆணையர் அருணாசலம் ராஜகோபால் தெரிவித்தார்.

  திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் கொம்யூனுக்குள்பட்ட ஆட்டிறைச்சி வியாபாரிகள் கூட்டம் பஞ்சாயத்து ஆணையர் அருணாசலம் ராஜகோபால் தலைமையில் வியாழக்கிழமை நடை

  பெற்றது.

  திருநள்ளாறு வட்டாரத்தில் 18 இடங்களில் சாலையோரத்தில் ஆடு வெட்டி இறைச்சி வியாபாரம் செய்யப்படுகிறது.

  சாலையோரத்தில் ஆடு போன்றவற்றை வெட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  காரைக்காலில் நகராட்சி நிர்வாகக் கட்டுப்பாட்டில் ஆடு வெட்டும் கூடம் உள்ளது. இக் கட்டடத்தில் மட்டுமே ஆடுகளை வெட்டிக் கொண்டு வந்து வியாபாரம் செய்ய வேண்டுமென ஆணையர் கூறினார்.

  இந்த அறிவுறுத்தலை மீறி சாலையோரத்திலேயே பணியை செய்து கொண்டிருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆணையர்.

  காரைக்கால் பகுதியில் உள்ள ஆடு வெட்டும் கூடம் செயல்படுவதாக தெரியவில்லை.

  இக்கூடத்தில் ஆட்டை பரிசோதிக்கும் கால்நடை மருத்துவரும் இல்லை. இந்தச் சூழலில் திருநள்ளாறு, அம்பகரத்தூரிலிருந்து சுமார் 15 கி.மீ. கடந்து காரைக்கால் சென்று திரும்புவது என்பது இயலாதது.

  இதுகுறித்து திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் கலந்துகொண்ட வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக மேலாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai