சுடச்சுட

  

  காரைக்கால் அருகேயுள்ள ஓஎன்ஜிசி கிடங்கின் மின்சார கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.

  காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதியில் ஓஎன்ஜிசி நிர்வாக அலுவலகம் செயல்படுகிறது. போலகம் பகுதியில் உள்ள புதுச்சேரி மின்திறல் குழுமத்துக்கு சுமார் ஒன்றரை கி.மீ. தூரத்தில் ஓஎன்ஜிசி துரப்பன சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் வைக்கக்கூடிய கிடங்கு உள்ளது. இது பாதுகாப்பு மையமாகவும், பொருள்கள் சேதமடைந்தால் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளும் இங்கு நடைபெறுகிறது.

  இந்தக் கிடங்கில் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு மின்சாரத் தேவைக்காக மின்சாரக் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இதில் வியாழக்கிழமை பிற்பகல் திடீரென தீப்பிடித்தது.

  இதுகுறித்து தகவலறிந்து காரைக்கால் மார்க் துறைமுகம், காரைக்கால் தீயணைப்பு நிலையத்திலிருந்து தலா ஒரு வாகனம் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தியது.

  மின் கசிவு காரணமாக இது நிகழ்ந்திருக்குமென கூறப்படுகிறது. இந்த கிடங்கில் இருந்தவையாவும் இரும்பு பொருள்கள் என்பதால் பெரும் சேதமில்லை. இருப்பினும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின் வயர்கள் உள்ளிட்ட பொருள்கள் தீயினால் சேதமடைந்துவிட்டதாக கிடங்கில் பணியாற்றுவோர் தெரிவித்தனர்.

  இதுகுறித்து ஓஎன்ஜிசி தலைமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையொட்டி அதிகாரிகள் பலர் கிடங்குக்கு சென்று பார்வையிட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai