சுடச்சுட

    

    வில்லியனூர் அருகே தனியார் கல்லூரி கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

    வில்லியனூர் அருகே ஆச்சார்யபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சுவற்றிக்கு வண்ணம் பூசும் பணியில் பாகூர்பேட் புதுநகரைச் சேர்ந்த விஜயநந்தன் மகன் சந்தோஷ்குமார் (17) புதன்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது, கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். அவரை புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai