சுடச்சுட

  

  காங்கிரஸ் கட்சியை வீழ்த்தும் சக்தி யாருக்கும் இல்லை

  By புதுச்சேரி,  |   Published on : 04th April 2014 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தும் சக்தி எவருக்கும் இல்லை என மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

  புதுச்சேரி முதலியார்பேட்டை வட்டாரக் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் கடலூர் சாலையில் வியாழக்கிழமை நடந்தது. வட்டாரத் தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். மத்திய அமைச்சரும், காங்கிரஸ் வேட்பாளருமான நாராயணசாமி பேசியதாவது: வைத்திலிங்கம் முதல்வராக இருந்தபோது ரோடியர் மில் ஓடாமல் இருந்த போது கூட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கினார். ஆனால் ரோடியர் மில்லை திறப்பேன் என வாக்குறுதி கொடுத்த ரங்கசாமி ரோடியர் மில்லை மூடினார்.

  ரங்கசாமி புதுச்சேரி மாநிலத்துக்கு என்ன புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார், நான் என்ன செய்தேன் என்பதை எழுதி ரங்கசாமிக்கு தபாலில் அனுப்பி வைக்கிறேன். அதை படித்துப் பார்த்துவிட்டு ரங்கசாமி பதில் கூறட்டும்.

  காங்கிரûஸ வீழ்த்த முடியாது: இதைத் தொடர்ந்து திருபுவனை தொகுதி மதகடிப்பட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் நாராயணசாமி பேசியதாவது: புதுச்சேரியில் காங்கிரசை வீழ்த்தும் சக்தி யாருக்கும் இல்லை.

  நாடாளுமன்றத் தேர்தலை சவாலோடு எதிர் கொண்டு ஜெயித்தால் அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் புதுச்சேரியில் ஆட்சியமைப்பது உறுதியாகும் என்றார் நாராயணசாமி.

  இந்நிகழ்ச்சியில் எதிர்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம், எம்எல்ஏ ஏ. நமச்சிவாயம், பொதுச் செயலர் ஏகேடி.ஆறுமுகம், செயலர் தனுசு, திருபுவனை வட்டார காங்கிரஸ் பொதுச் செயலர் வெங்கடேசன், மாநில பிரசாரக்குழு ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai