சுடச்சுட

  

  சிபிஐ அமைப்பின் மூலம் புதுவை அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல்

  By புதுச்சேரி  |   Published on : 04th April 2014 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை அரசு அதிகாரிகளை மிரட்ட சிபிஐ அமைப்பைப் பயன்படுத்தியதே மத்திய அமைச்சர் நாராயணசாமி செய்த பணி என முதல்வர் ரங்கசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

  புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி வழக்குரைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

  இக் கூட்டத்துக்கு மூத்த வழக்குரைஞரும், புதுதில்லி பிரதிநிதியுமான ஏ.பக்தவத்சலம் தலைமை வகித்தார். என்.ஆர். காங்கிரஸ் பொதுச் செயலர் வி.பாலன், வேட்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

  23 ஆண்டுகள் எம்.பி.யாகவும், 5 ஆண்டுகளாக மத்திய இணை அமைச்சராகவும் இருந்த நாராயணசாமி புதுவைக்கு என்ன நன்மை செய்தார். நான் என்ன செய்தேன், அதுகுறித்து விவாதிக்கத் தயாரா எனக் கேட்கிறார்.

  நான் கடந்த 2001-06 கால கட்டத்தில் முதல்வராக இருந்த போது காரைக்காலுக்கு என்.ஐ.டி, ரயில் இணைப்பு போன்றவை குறித்து மத்திய அரசு கோரிக்கை வைத்து கடிதம் எழுதினேன்.

  பல்வேறு திட்டங்களுக்கு அடித்தளமிட்டவன் நான். ஆனால் தற்போது தன்னால் தான்அந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக நாராயணசாமி சாதனைப்பட்டியல் வாசிக்கிறார்.

  மாநில அரசை நடத்துவது எவ்வளவு சிரமமான காரியம் என்பது அவருக்குத் தெரியும்.

  மத்திய அரசுடன் என்.ஆர். காங்கிரஸ் அரசு இணக்கமாகத் தான் போக விரும்பியது.

  ஆனால் அது நிறைவேறாமல் செய்தனர். இதனால் புதுவைக்கு இழப்புகள் ஏராளம். புதுவையின் நிதி நெருக்கடிக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி தான் காரணம்.

  அவர் நினைத்திருந்தால் புதுவையின் கடன் ரூ.5650 கோடியை ரத்து செய்திருக்கலாம். இதன் மூலம் மாநில அரசு மாதம் ரூ.500 கோடி வட்டி செலுத்துவதைத் தவிர்த்திருக்கலாம். புதுவை மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்க மாநில அந்தஸ்து தேவை.

  புதுவையில் அரசு அதிகாரிகளை மிரட்ட சிபிஐ அமைப்பைப் பயன்படுத்தினர். இதனால் புதுதில்லியில் புதுவை மாநில அதிகாரிகளுக்கு பெரிய இழுக்கு உண்டானது. அதிகாரிகள் பணி செய்யவே அஞ்சினர். வருவாயும் குறைந்து விட்டது.

  வரும் தேர்தலில் வெற்றி பெறும் அரசு புதுவை மாநில நலன்களை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இதற்காகத் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தோம். நரேந்திர மோடி பிரதமரானால் பல்வேறு நன்மைகளை நாம் பெறலாம்.

  கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு நமக்கு அளிக்காத சலுகைகளை, இரண்டு ஆண்டுகளில் பெற்று புதுவையை முன்னேறிய மாநிலமாக ஆக்கலாம்.

  என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தேர்தலுக்கு பின் மத்திய அரசில் முக்கியப் பொறுப்பு வகிப்பது நிச்சயம். அவரது வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்றார் ரங்கசாமி.

  இந்நிகழ்ச்சியில் பார் கவுன்சிலர் உறுப்பினர் ரங்கநாதன், மூத்த வழக்குரைஞர்கள் மோகன்தாஸ், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எம்.குமரன் தலைமையில் ஏராளமானோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் இணைந்தனர்.

  என்.ஆர். காங்கிரஸ் வழக்குரைஞர்கள் சங்கரமூத்து, தமிழ்ச்செல்வன், பாலாஜி, ஜீவ தேனா, தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai