சுடச்சுட

  

  டெபாசிட் தொகையை சில்லறையாக கொண்டு வந்த சுயேச்சை வேட்பாளர்

  By புதுச்சேரி,  |   Published on : 04th April 2014 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட மனு செய்த வேட்பாளர் சைமன் சிட்டிபாபு டெபாசிட் தொகையான ரூ.25 ஆயிரத்தை சில்லறையாகக் கொண்டு வந்தார்.

  மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோர் ரூ.25 ஆயிரம் டெபாசிட் தொகையாகக் கட்ட வேண்டும்.

  இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர் சைமன் சிட்டிபாபு டெபாசிட் தொகையை நாணயங்களாக அளித்தார்.

  ரூ. 5000-த்துக்கு 2 ரூபாய் நாணயங்களாகவும், ரூ.20 ஆயிரத்துக்கு பத்து ரூபாய் நாணயங்களாகவும் அளித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த 11 பேர் நாணயங்களை இரு முறை எண்ணினர்.

  இது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, நான் தேமுதிகவில் உள்ளேன். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவிலும், உள்ளாட்சித்தேர்தல், மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாகவும் போட்டியிட்டேன். நாராயணசாமி, ரங்கசாமி இருவரும் மக்களைப் பார்க்காமல் சண்டையிடுகிறார்கள். அதைக் கண்டிக்கவே தேர்தலில் போட்டியிடுகிறேன். அவர்களின் கவனத்தைக் கவர்வதே என் எண்ணம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai