சுடச்சுட

    

    திமுகவில் இணைந்த ராஜ்பவன் தொகுதி காங்கிரஸார்

    By புதுச்சேரி,  |   Published on : 04th April 2014 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி ராஜ்பவன் பேரவைத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் வியாழக்கிழமை திமுகவில் இணைந்தனர்.

    ராஜ்பவன் வைத்திக்குப்பம், குருசுக்குப்பம், சின்னையன்பேட்டை ஆகிய பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் லட்சுமி, நாகராஜ் ஆகியோர் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மாநில திமுக அமைப்பாளர் எம்ஏஎஸ் சுப்பிரமணியன், வேட்பாளர் எச்.நாஜிம் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சுப்பிரமணியன் பேசியதாவது: என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த அக் கட்சியினர் ஏராளமானோர் திமுகவில் இணைந்துள்ளனர். அவர்கள் திமுகவுக்கும், பெரியார் திராவிடர் கழகத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 800 திருநங்கைகளும் ஆதரவு தருவதாக உறுதி கூறியுள்ளனர் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், பொருளாளர் அனிபால் கென்னடி, நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai