சுடச்சுட

  

  காரைக்கால் அருகே கூலித் தொழிலாளி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி மற்றும் உறவினரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

  காரைக்கால் அருகேயுள்ள மேலஓடுதுறை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் தமிழ்ச்செல்வன் (27). புதன்கிழமை வீட்டினுள் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக குடும்பத்தார் கூறினர். இவரது மனைவி கலைமகள். கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

  இதனிடையே, தகராறு ஏற்படும்போது தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தமது சகோதரி கலைவாணியிடம் கலைமகள் தெரிவிப்பாராம். கலைவாணியின் கணவர் பக்கிரிசாமி (40), மைத்துனியின் வீட்டுக்குச் சென்று சமரசம் செய்து வைப்பாராம்.

  இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தமிழ்ச்செல்வனை பக்கிரிசாமி கழுத்தை நெரித்து கொலை செய்தது நிரவி போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

  இதுதொடர்பாக, பக்கிரிசாமியையும் கொலையை மறைத்ததற்காக கலைமகளையும் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai