சுடச்சுட

  

  முதல்வர் ரங்கசாமி கொண்டு வந்த பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுத்தவர் மத்திய அமைச்சர் நாராயணசாமி என என்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  புதுச்சேரி மாநில பாஜக செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

  இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் எம்.விஸ்வேஸ்வரன் தலைமை வகித்தார். முன்னாள் மாநிலத் தலைவர்கள் தாமோதர், கேசவலு, பொதுச் செயலர் ஆர்.வி.சாமிநாதன், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலர் வி.பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில்ஆர்.ராதாகிருஷ்ணன் பேசியது:

  புதுச்சேரியில் 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 5 ஆண்டுகள் மக்களவை உறுப்பினராகவும் நாராயணசாமி இருந்துள்ளார். அவர் புதுச்சேரி மாநிலத்துக்கு என்ன நன்மைகளைச் செய்தார் என விளக்க வேண்டும்.

  முதல்வர் ரங்கசாமி கொண்டு வந்த காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம், காமராஜர் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், முதியோர், பெண்கள் ஓய்வூதியம் உள்பட பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் நாராயணசாமி தடுத்தார்.

  மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதியை கிடைக்காமல் செய்தார். 10 ஆண்டு கால காங்கிரஸ் அரசில் ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம் தான் பெருகி

  உள்ளது.

  புதுச்சேரியில் துறைமுக அபிவிருத்தித் திட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலம், உயர் கல்வி நிறுவனங்களை தொடங்க நாராயணசாமி என்ன நடவடிக்கை எடுத்தார்?

  தற்போது நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது. எனவே வாக்காளர்கள் ஜக்கு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன். இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில நிர்வாகிகள் தங்க.விக்ரமன்,பரந்தாமன்,ஜெயந்திமாலா,அன்புச்செல்வம்,செயலர்கள் பிரபு, சுந்தரமூர்த்தி, கஸ்தூரி, பொருளாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai