சுடச்சுட

  

  வாகனங்களின் நெம்பர் பிளேட்டில் விதிகளை மீறி எழுதியிருந்தால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து புதுவை மாவட்டத் தேர்தல் அதிகாரி சு.பா.தீபக்குமார் செய்திக் குறிப்பு: புதுவை யூனியன் பிரதேசத்தில் வாகனங்களின் எண் பலகையில் தங்கள் விருப்பத்துக்கேற்ப வாசகங்கள், பெயர்கள், சித்திரங்கள் மற்றும் புகைப்படங்களை எழுதி வைத்துள்ளது கவனத்துக்கு வந்துள்ளது.

  இது வாகனச் சட்டப்படி குற்றமாகும். ஆகவே பொதுமக்கள் தங்கள் வாகனங்களின் எண் பலகையில், மோட்டார் வாகன சட்டத்தில் வறையறுக்கப்பட்ட அளவு மற்றும் நிறத்தில் எண் பலகையை பொருத்த வேண்டும். சிலர், தங்கள் வாகனங்களில், அரசு, அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் வாகனங்களைப் போல் தோற்றமளிக்கும் விதத்தில் எழுதி வைத்துள்ளனர். இச் செயலும் குற்றமாகும்.

  இந்த வாகனங்கள் அரசுக்குச் சொந்தமான வாகனங்கள் என்ற போர்வையில், மதுவகைகள், பணம், ஆயுதங்கள், வெடி பொருள்கள் மற்றும் சமூக விரோதிகளைக் கூட புதுச்சேரிக்கு கடத்த உபயோகப்படுத்தக் கூடும். ஆகவே மேற்கண்ட திசை திருப்பும் வாசகங்கள், சித்திரங்கள், புகைப்படங்கள் எழுதி வைத்துள்ள வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai