சுடச்சுட

  

  பழைய கேள்வித்தாள் முறையையே பின்பற்றக் கோரிக்கை

  By புதுச்சேரி,  |   Published on : 04th April 2014 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வுக்கு பழைய கேள்வித்தாள் முறையையே பின்பற்ற வேண்டும் என கல்வியாளர்கள், ஜிப்மர் நுழைவுத் தேர்வு எழுதுவோர், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் ஆகியன கோரியுள்ளன.

  இது தொடர்பாக ஜிப்மர் இயக்குநர் டிஎஸ்.ரவிக்குமாருக்கு அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

  ஜிப்மர் மருத்துவமனையில் நுழைவுத் தேர்வு முறையில் வெளிப்படையாகவும், நவீனதொழில்நுட்பத்துடனும் மேம்படுத்த நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வுக்கான கேள்வித்தாள் முறையை மாற்றம் செய்திருப்பது தேர்வு எழுதுவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  தற்போது மாற்றப்பட்டுள்ள கேள்வித்தாள் முறையில் உயிரி அறிவியலை விட இயற்பியல் அறிவியலுக்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. உயிரி அறிவியல் முறைதான் மருத்துவத்துறைக்கு முக்கியமானதாகும்.

  பழைய கேள்வித்தாள் முறைப்படி ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் பாடப் பிரிவுகளுக்குச் சமமான மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. ஆனால் புதிய முறைப்படி இயற்பியல்,வேதியியலுக்கு மட்டும் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது.

  உயிரியல், விலங்கியலுக்கு குறைந்த முக்கியத்துவமே தரப்பட்டுள்ளது.

  அதேபோல் இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு கேள்வித்தாளில் அளிக்கப்பட்டுள்ள மதிப்பெண்களுக்கு ஏற்ப தேவையான நேரம் வழங்கப்படவில்லை.

  இதுபோன்ற முன்னறிவிப்பில்லாத கேள்வித்தாள் முறையை மாற்றுவது, ஜிப்மர் மருத்துவமனை நுழைவுத் தேர்வு எழுதுவோரை மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளாக்கும்.

  எனவே நடப்பாண்டு நுழைவுத் தேர்வுக்கு பழைய கேள்வித்தாள் முறையையே பின்பற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai