சுடச்சுட

  

  பாமகவை ஆதரிக்க இந்திய ஜனநாயகக் கட்சி முடிவு

  By புதுச்சேரி  |   Published on : 04th April 2014 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூரில் போட்டியிடும் கட்சி நிறுவனரின் நலனைக் கருத்தில் கொண்டு புதுவையில் பாமகவை ஆதரிக்க இந்திய ஜனநாயகக் கட்சி முடிவு செய்துள்ளனர்.

  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், புதுவைத் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ், பாமக வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் யாரை ஆதரிப்பதெனத் தெரியாமல் கூட்டணிக் கட்சிகள் குழப்பத்தில் தொடர்கின்றன. பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஆரம்பத்தில் என்.ஆர். காங்கிரûஸ ஆதரிப்பதாக தெரிவித்தன. இதில் பாஜக மட்டும் என்.ஆர். காங்கிரûஸ ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறது. மதிமுக, பாமகவை ஆதரித்துள்ளது. இதர கட்சிகள் நிலையான முடிவைத் தெரிவிக்காமல் குழப்பத்தில் நீடித்து வருகின்றன.

  இந்நிலையில், பாமக வேட்பாளரை ஆதரிப்பதாக இந்திய ஜனநாயகக் கட்சியினர் தற்போது தெரிவித்துள்ளனர்.

  இது குறித்து அக்கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் சத்தியவேல் வெளியிட்ட அறிக்கை: புதுவையில் இந்திய ஜனநாயக கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது வெற்றிக்கு கூட்டணிக் கட்சியினர் பாடுபட்டு வருகின்றனர். இதனால், புதுவையில் பாமக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பணியாற்ற கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம் எனக் கூறினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai