சுடச்சுட

  

  திருவண்ணாமலைக்கு அனுப்புவதற்காக புதுவை பார்சல் அலுவலகத்தில் இருந்த பித்தளை விளக்குகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

  புதுவை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள எஸ்ஆர்எஸ் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த விமலன், முரளி ஆகியோர் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

  அப்போது, கடந்த மார்ச் 15-ம் தேதி ஜெயம் கிராபிக்ஸ் பெயரில், புகழ் என்பவருக்கு திருவண்ணாமலைக்கு அனுப்புவதற்காக வந்த 2 பார்சல்கள் கிடந்தன.

  இது குறித்து சந்தேகமடைந்த அவர்கள், உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீஸார் துணையுடன் பார்சலை சோதனையிட்டனர். அதில் 80 கிலோ எடை கொண்ட 204 காமாட்சியம்மன் பித்தளை விளக்குகள் இருந்தது தெரியவந்தது.

  இதனையடுத்து, ஆவணங்கள் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த பித்தளை விளக்குகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, உருளையன்பேட்டை போலீஸில் ஒப்படைத்தனர்.

  இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்த விளக்குகளை போலீஸார் வணிகவரித் துறையினரிடம் ஒப்படைத்தனர். மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அனுப்ப முயன்றார்களா என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரித்து

  வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai