சுடச்சுட

  

  புதுவையில் பெயர் ஒற்றுமையைப் பயன்படுத்தி பிரெஞ்சு குடியுரிமைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தவர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

  புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் மகாத்மா காந்தி வீதியைச் சேர்ந்த நாதமுனி மகன் மதிவாணன் (52). இவர் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார். பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றுள்ள நாதமுனி அண்மையில் இறந்து போனார். இதனையடுத்து, வாரிசு அடிப்படையில் பிரெஞ்சு குடியுரிமைப் பெற மதிவாணன் முயற்சித்துள்ளார். இதற்காக புதுவையில் உள்ள பிரெஞ்சு தூதரக அலுவலகத்தில் மதிவாணன் விண்ணப்பித்துள்ளார்.

  இதற்காக கடந்த ஜனவரி 9-ஆம் தேதி புதுவை தூதரக அலுவலகத்தில் விசாரித்துள்ளார்.

  அப்போது மதிவாணன், தந்தைப் பெயர் நாதமுனி என்ற இவரது பெயரில், ஆனந்தம்மாள் சத்திரம், வில்லியனூரைச் சேர்ந்த மதிவாணன் என்பவரும் பிரெஞ்சு குடியுரிமைப் பெற விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது. ஒரே பெயரில் இரண்டு பேர் விண்ணப்பித்ததையடுத்து, துôதரக அலுவலகத்தில் கோட்டக்குப்பம் மதிவாணனை அழைத்து விசாரித்துள்ளனர்.

  அப்போது தனது பெயரைப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் தயாரித்து மற்றொரு நபர் முறைகேடாக பிரெஞ்சு குடியுரிமைப் பெற முயன்றது அவருக்குத் தெரிய வந்தது. இது குறித்து, மதிவாணன் கொடுத்த புகாரின் பேரில், புதுவை குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸார் வில்லியனூரைச் சேர்ந்த மதிவாணன் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai