சுடச்சுட

    

    பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை: தேர்தல் துறை அறிவிப்பு

    By புதுச்சேரி  |   Published on : 04th April 2014 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மாநிலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்யும் போது பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை குறித்து கீழ்காணும் தகவலைத் தேர்தல் துறை வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், தொகுதி தேர்தல் அலுவலருமான தீபக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்த மாவட்ட நிர்வாகம் வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்கும் பொருட்டு தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இப் பறக்கும் படைகளில் செயல் நடுவர் (உஷ்ங்ஸ்ரீன்ற்ண்ஸ்ங் ஙஹஞ்ண்ள்ற்ழ்ஹற்ங்) தலைமையில் புதுவை காவல்துறையைச் சேர்ந்த தலைமைக் காவலர், துப்பாக்கி ஏந்திய மத்திய ஆயுதப்படை வீரர் இடம் பெற்றிருப்பார்.

    அனைத்து அலுவலர்களும் தேர்தல் துறையால் வழங்கப்பட்ட அரசு முத்திரையுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டையை பொதுமக்கள் பார்க்கும்படி கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் சோதனை செய்யும் போது, மேற்கூறியவை உள்ளதா என பொதுமக்கள் சரி பார்க்க வேண்டும்.

    இது குறித்து சந்தேகம் ஏற்பட்டால் உடனே 1950 அல்லது 0413-2247875, 2247876, 1800-425-4151 எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் தீபக்குமார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai