சுடச்சுட

  

  மனு தாக்கலின் போதுசெய்தியாளர்களை அனுமதிக்க வலியுறுத்தல்

  By புதுச்சேரி,  |   Published on : 04th April 2014 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தல் மனுத் தாக்கல் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க பிற மாநிலங்களைப் போல் செய்தியாளர்களை அனுமதிக்க வேண்டும் என புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தினர் புதுவைத் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

  இது குறித்து சங்கத் தலைவர் வி.தயாளன், புதுவை தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு:

  புதுவையில் மக்களவைத் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற தேர்தல் துறை பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

  தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்படும் அறிக்கைகள், தகவல்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

  இந்நிலையில் புதுவை மக்களவைத் தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது, செவ்வாய்க்கிழமை மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு செய்தியாளர்கள் சென்றபோது, அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்காமல் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் பத்திரிகையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  அனைத்து மாநிலங்களிலும் மனு தாக்களின் போது செய்தியாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

  வரும் காலங்களில் தேர்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளிலும் செய்தியாளர்களை அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai