சுடச்சுட

    

    மாநிலம் பின் தங்கிய நிலைக்கு நாராயணசாமி, ரங்கசாமி தான் காரணம்

    By புதுச்சேரி,  |   Published on : 04th April 2014 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மாநிலத்தின் பின் தங்கிய நிலைக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி, முதல்வர் ரங்கசாமி இருவரும் தான் காரணம் என சுயேச்சை வேட்பாளர் மு.ராமதாஸ் கூறியுள்ளார்.

    புதுச்சேரியில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி அரசு நிதி நெருக்கடிக்கு மத்திய அரசின் கொள்கை முடிவுதான் காரணம். மத்திய அரசு யூனியன் பிரதேசங்களுக்குத் திட்ட செலவு நிதி முன்பு 90 சதவீதம் மானியமாகவும், பத்து சதவீதம் கடனாகவும் தந்தது. இந்த மானியம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு தற்போது 30 சதவீதமாகியுள்ளது.

    அதே நேரத்தில் திட்டக் கடனை கடந்த 2007-ல் நிறுத்தி விட்டது. இதனால் மத்திய அரசு திட்ட நிதியைப் பெற இயலவில்லை. இதனால் புதுவை கடன் தொகை ரூ.5,650 கோடியாகியுள்ளது. இச்சூழலுக்கு முக்கியக் காரணம் மத்திய அரசு தான். இதை தீர்க்க வேண்டிய பொறுப்பு எம்.பி.க்கு உள்ளது.

    புதுச்சேரி அரசு பல்வேறு காலக் கட்டத்தில் மாநில அந்தஸ்துக்கு முயற்சித்தது. இதிலும் எம்.பி.யின் பங்கு அதிகம். மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் மத்திய அரசிடமிருந்து நிதி பெற நடவடிக்கை எடுக்க முடியும். எம்பியாகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நிதிசிக்கலை தீர்த்து வைப்பேன்.

    புதுவை மாநிலத்தின் தற்போதுள்ள பிரச்னைக்கு ரங்கசாமியும், நாராயணசாமியும் தான் காரணம். அனைத்து தரப்பினரின் ஆதரவோடு தேர்தலில் வெற்றி பெறுவேன் என்றார் ராமதாஸ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai