சுடச்சுட

  

  வாக்குப் பதிவை அதிகரிக்க காரைக்காலில் விழிப்புணர்வு பலூன்

  By காரைக்கால்  |   Published on : 04th April 2014 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்க காரைக்காலில் தேர்தல் துறை சார்பில், விழிப்புணர்வு பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது.

  இந்திய தேர்தல் ஆணையம் புதிதாக வாக்காளர்களை சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் உள்ளோர் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  காரைக்கால் மாவட்ட தேர்தல் துறை, இந்த விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொள்ள காரைக்கால் பாலிடெக்னிக் நிர்வாகத்திடம் முக்கியப் பணிகளை ஒப்படைத்தது.

  கையெழுத்து இயக்கம், பேரணி, துண்டுப்பிரசுரங்கள் வெளியிடுதல், கட்டுரைப் போட்டி, வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் ஆட்சியர் கடிதம் வெளியிடுதல், பேருந்துகளில் போர்டு வைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  தேர்தல் துறையின் சார்பில், உங்கள் வாக்கு உங்கள் உரிமை என புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிடும் தகவல் பெரிய பலூனில் எழுதப்பட்டு, காரைக்கால் சுற்றுலாத்துறையின் தங்கும் விடுதி கட்டடத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது.

  பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகள் மேற்கொண்டிருப்பதாகவும், அடுத்த சில நாள்களில் காரைக்கால் மாவட்டம் முழுவதும் மாதிரி வாக்குச்சாவடி அமைத்து, ஜீப்பில் நகரம், கிராமப் புறங்களுக்கு கொண்டு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், வாக்காளர்களை கவரும் வகையில் வில்லுப்பாட்டு உள்ளிட்ட கிராமிய நடனம், இசையுடன் கூடிய நிகழ்ச்சிகள் திரையின் மூலம் காட்டப்படவுள்ளது. இவையாவும் வருகிற 21-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளதாக காரைக்கால் தேர்தல் துறை வட்டாரங்கள் கூறின.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai