சுடச்சுட

  

  புதுச்சேரி சேவாலயம், கஸ்தூரிபாய் காந்தி நர்சிங் கல்லூரி ஆகியன சார்பில் உலக சுகாதார தின விழா, ஊட்டச்சத்து உணவு செய்முறை பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  உதவி பேராசிரியை சுகுணா முகாமைத் தொடங்கி வைத்தார். உதவிப் பேராசிரியை இளவரசி அன்பின் வழி மருத்துவம் குறித்து உரையாற்றினார். சேவாலயம் இயக்குநர் சித்ரா சங்கர் உணவே மருந்து, ஊட்டச்சத்து குறித்து பேசினார்.

  ஊட்டச்சத்தான உணவு தயாரிப்பது குறித்து மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. மகளிர் சுயஉதவிக் குழுவினர், கர்ப்பிணிகள், கல்லூரி மாணவியர் பயன் அடைந்தனர்.

  இதற்கான ஏற்பாடுகளை களப்பணியாளர்கள் அருணாதேவி, காவியா, கண்ணகி ஆகியோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai