சுடச்சுட

  

  என்.ஆர்.காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மத்திய அரசு அமையும்: ரங்கசாமி

  By புதுச்சேரி,  |   Published on : 05th April 2014 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  என்.ஆர். காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மத்திய அரசு அமையும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

  புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி என்ஆர். காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தொகுதி எம்எல்ஏ அசோக் ஆனந்த் தலைமை வகித்தார். வேட்பாளர் ராதாகிருஷ்ணன், பாஜக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  இக் கூட்டத்தில் ரங்கசாமி பேசியதாவது:

  மத்திய அரசில் இல்லாத ஆட்சி புதுவையில் நடக்கிறது. மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசமான புதுவை எதற்கெடுத்தாலும் மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது. கடந்த இரண்டரை ஆண்டாக எத்தனை இடையூறுகள். எளிதாக நிதி கிடைக்கவில்லை. இருப்பினும் சிறப்பாக நிர்வாகம் செய்து முக்கியத் திட்டங்களை தற்போது செய்துள்ளோம்.

  மத்திய அமைச்சர் நாராயணசாமி தனது தொகுதி மேம்பாட்டு நிதியை செலவு செய்யவில்லை. ஐஏஎஸ் அதிகாரிகள் அவருக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயம் இருந்தது.

  வரும் காலத்தில் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்.

  பாஜக 233 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. நாம் அங்கம் வகிக்கும் அரசு மத்தியில் அமையவுள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள கட்சி எம்பி மத்திய அரசுக்கு தேர்வு செய்யப்பட்டால் சிறப்பாக செயல்பட முடியும்.

  ராதாகிருஷ்ணன் சிறப்பாக செயல்படக் கூடியவர். குடிசைகளை மாற்றி கல்வீடாக்கும் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டவர். அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்க வேண்டும் என்றார் ரங்கசாமி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai