சுடச்சுட

    

    என்.ஆர். காங்கிரஸ் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம்

    By புதுச்சேரி,  |   Published on : 05th April 2014 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் வீராசாமி தலைமை வகித்தார். முதல்வர் என்.ரங்கசாமி, பொதுச் செயலர் வி.பாலன், செயலர் என்.எஸ்.ஜெயபால், நாடாளுமன்ற வேட்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் 7 ஆண்டுகள் செய்த நல்லாட்சியால் முதல்வர் ரங்கசாமிக்கு மீண்டும் ஆட்சி செய்ய கடந்த 2011-ல் புதுவை மக்கள் வாய்ப்பு வழங்கினர். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய முடியாமல் மத்திய அமைச்சர் நாராயணசாமி தடைகளை ஏற்படுத்தினார். ஆளுநரைப் பயன்படுத்தி அரசு அதிகாரிகளை அடிக்கடி மாற்றி நிர்வாகத்தை சீர்குலைக்கச் செய்தார். தற்போது மீண்டும் தேர்தலில் போட்டியிடும் நாராயணசாமியை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.

    புதுவை அரசு தனித்து செயல்படும் வகையில் தனி மாநில அந்தஸ்து பெற ரங்கசாமி போராடி வருகிறார். அவரது நோக்கம் நிறைவேற வேட்பாளர் ராதாகிருஷ்ணனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இளைஞரணியினர் வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்ட வேண்டும். கல்லூரி மாணவர்கள், மாணவிகளிடம் அரசின் சாதனைகளை விளக்கி வாக்குச் சேகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உப்பளம், உருளையன் பேட்டை தொகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai