சுடச்சுட

  

  புதுச்சேரியை அடுத்த மண்ணாடிப்பட்டு தொகுதி என்.ஆர். காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்,

  அலுவலகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

  திருக்கனூர், கூனிச்சம்பட்டில் நடைபெற்ற செயல்வீரர் கூட்டத்துக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் டிபிஆர்.செல்வம் தலைமை வகித்தார். முதல்வர் என்.ரங்கசாமி, பொதுச் செயலர் வி.பாலன் ஆகியோர் தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அறிவுரை வழங்கினர். வேட்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணனை ஜக்கு சின்னத்தில் வெற்றிப் பெறச் செய்ய கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

  தொகுதி பொறுப்பாளர் ஞானசேகரன், கரும்பு ஆலை கமிட்டித் தலைவர் சூரன்,உறுப்பினர் அரியபுத்திரி, நிர்வாகிகள் சரவணன், நாசர், பன்னீர், பழனி, கூனிச்சம்பட்டு சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கே.ஆர்.பாளையத்தில் தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai