சுடச்சுட

    

    கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    By புதுச்சேரி,  |   Published on : 05th April 2014 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை கலிதீர்த்தாள்குப்பம் ஸ்ரீ மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் எம்.தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.வி. சுகுமாறன் முன்னிலை வகித்தார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நேர்மையான முறையில் வாக்களிப்போம் என கல்லூரி முதல்வர் மலர்க்கண் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ச.சசிகலா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai