சுடச்சுட

    

    கள்ள நோட்டு புழக்கம்: சிபிசிஐடி போலீஸார் விசாரணை

    By புதுச்சேரி,  |   Published on : 05th April 2014 04:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் கள்ள நோட்டுப் புழக்கம் குறித்து எழுந்துள்ள புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவைப் பகுதியில் உள்ள எச்டிஎப்சி, ஐடிபிஐ, சிட்டி யூனியன் உள்ளிட்ட வங்கிகளிலிருந்து வழக்கம் போல் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்குப் பணம் அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த பணத்தில், 1,000 ரூபாய் நோட்டுகள் இரண்டும், 500 ரூபாய் நோட்டுகள் ஐந்தும், 50 ரூபாய் நோட்டுகள் ஒன்றும் கள்ள நோட்டுகளாக வந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

    இது குறித்து, சென்னை ரிசர்வ் வங்கி கிளையின் பொது மேலாளர் ராவ் புதுவைப் போலீஸில் அண்மையில் புகார் கொடுத்திருந்தார்.

    இதன்பேரில், புதுவை குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, புதுவையில் கள்ள நோட்டுகள் புழக்கம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கள்ள நோட்டுக்களை அதிகளவில் புழக்கத்தில் விட்டிருந்த வெளிநாட்டைச் சேர்ந்த கும்பலை போலீஸார் பிடித்தனர்.

    இதனையடுத்து, மீண்டும் கள்ள நோட்டுப் புழக்கம் எழுந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai