சுடச்சுட

  

  காங்கிரஸ், திமுக, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்

  By புதுச்சேரி,  |   Published on : 05th April 2014 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமை நிறைவடைகிறது.

  தமிழகம், புதுவையில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 29-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் ஆகும். 31-ம் தேதியும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

  இந்நிலையில் ஏப்ரல் 1-ம் தேதியன்று அதிமுக சார்பில் வேட்பாளர் ஓமலிங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (எம்.எல்) சார்பில் கோ.பழனியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

  புதன்கிழமை முன்னாள் எம்.பி. ராமதாஸ் சுயேச்சையாகவும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வி.ரெங்கராஜன், பகுஜன் சமாஜ் வேட்பாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, சண்முகம் சுயேச்சையாகவும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

  வியாழக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.விசுவநாதன், சுயேச்சையாக சஞ்சீவ்காந்தி, மஞ்சினி, செந்தில்குமார், சிட்டிபாபு, எழிலரசன், கா.ராமதாஸ் ஆகியோர் மாவட்ட தேர்தல் அதிகாரி தீபக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 13 வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

  வேட்பு மனு தாக்கல் செய்ய சனிக்கிழமை இறுதி நாளாகும்.

  பிரதான கட்சிகளான காங்கிரஸ், என்ஆர்.காங்கிரஸ், திமுக, பாமக, ஆகிய கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 7-ம் தேதி நடக்கிறது.

  9-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai