சுடச்சுட

    

    காரைக்காலில் வீடு வீடாக வாக்குச் சேகரித்த என்.ஆர். காங்கிரஸார்

    By காரைக்கால்,  |   Published on : 05th April 2014 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக காரைக்காலில் வீடு வீடாக சென்று அக் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    புதுவை என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஆர். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக அக்கட்சியினரும், பாஜகவினரும் வியாழக்கிழமை, காரைக்கால் வடக்குத் தொகுதியில் வீடு வீடாக வாக்கு சேகரித்தனர்.

    சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.எம்.சி.சிவக்குமார், பி.ஆர். சிவா, என்.ஆர். காங்கிரஸ் துணைத் தலைவர் கே. கோவிந்தராஜ், பாஜக மாநில செயலர் எம். அருள்முருகன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

    இதுகுறித்து என்.ஆர். காங்கிரஸ் துணைத் தலைவர் கே. கோவிந்தராஜ் கூறும்போது, புதுச்சேரி அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி பிரசாரம் செய்கிறோம். ரங்கசாமி ஆட்சியில் புதுவை மக்கள் பல்வேறு நன்மைகளை பெற்றுள்ளனர். எனவே, காரைக்கால் மக்கள் என்.ஆர். காங்கிரûஸ ஆதரிப்பார்கள் என்றார்.

    புதுவை மாநில பாஜக செயலர் எம். அருள்முருகன் கூறும்போது, மத்தியில் நரேந்திர மோடி பிரதமராக வேண்டுமென்ற உயரிய நோக்கில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மக்களும் மோடி பிரதமராக வேண்டும் என்ற ஆர்வமாக உள்ளனர். காரைக்கால் மக்களும் பாஜக கூட்டணியை நிச்சயம் ஆதரிப்பார்கள் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai