சுடச்சுட

  

  காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் பிரம்மோத்ஸவம் தொடங்கியது

  By காரைக்கால்,  |   Published on : 05th April 2014 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் 12 நாள்கள் நடைபெறும் பிரம்மோத்ஸவ விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  காலையில் 8 மணியளவில் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து ரிஷபக் கொடி வீதியுலா கொண்டு செல்லப்பட்டது.

  முன்னதாக விநாயகர், சுப்ரமணியர், கைலாசநாதர், சுந்தராம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. உத்சவ சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடிக் கம்பத்தின் அருகே நிறுத்தப்பட்டது. சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து கொடிக் கம்பத்தில் சிவாச்சாரியார்கள் ரிஷபக் கொடியை ஏற்றினர். பிறகு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

  தொடர்ந்து, நாள்தோறும் காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது. 12-ம் தேதி சனிக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ம் நாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. 12-ம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை கைலாசநாதருக்கு அபிஷேகமும், மாலை தெப்ப நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

  கொடியேற்ற விழாவில் நிர்வாக அதிகாரி (கோவில்கள்) ஏ. ராஜராஜன் வீராசாமி, கோயில் தனி அதிகாரி கோவி. ஆசைத்தம்பி மற்றும் உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai