சுடச்சுட

    

    கீழே கிடந்த நகையை ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு

    By புதுச்சேரி,  |   Published on : 05th April 2014 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் கீழே கிடந்த தங்க நகையை போலீஸில் ஒப்படைத்த பிளஸ்-2 மாணவியை டிஜிபி காமராஜ் பாராட்டினார்.

    புதுவை சின்னக்கடைப் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மீனாகுமாரி. இவரது மகள் அபிராமி (16). இவர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அபிராமி தனது தாயார் மீனாகுமாரியுடன், வெள்ளிக்கிழமை காலை புதுவை சூப்ரேன் வீதியில் உள்ள ஸ்டேட் பேங்க் கிளைக்குச் சென்றுள்ளார்.

    அப்போது வங்கியின் வாயில் பகுதியில் இரண்டு சவரன் மதிப்பிலான செயின் கீழே கிடந்ததை கண்டெடுத்துள்ளனர். உடனே அந்த நகையை, வங்கி மேலாளரிடம் கொடுத்தனர். வங்கி மேலாளர் அதனை போலீஸில் ஒப்படைத்துள்ளார். தவறவிட்ட செயின் குறித்து ஒதியன்சாலைப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மாணவி அபிராமியை புதுவை காவல்துறை இயக்குநர் காமராஜ் சால்வை அணிவித்துப் பாராட்டினார். சீனியர் எஸ்பி ஓம்வீர்சிங், இன்ஸ்பெக்டர் வீரவல்லபன் மற்றும் போலீஸார் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai