சுடச்சுட

  

  திமுகவுக்கு பழங்குடியின மக்கள் நல இயக்கம் ஆதரவு

  By புதுச்சேரி,  |   Published on : 05th April 2014 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி தொகுதி திமுக வேட்பாளர் எச்.நாஜிமுக்கு பழங்குடியின மக்கள் நல இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

  புதுச்சேரி திமுக வேட்பாளர் நாஜிம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

  அவருக்கு பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

  இதன் ஒருபகுதியாக புதுவை மாநில பழங்குடியின மக்கள் நல இயக்கம் சார்பில் அதன் மாநிலச் செயலர் மா.ஏகாம்பரம் தலைமையில் நிர்வாகிகள் மாநில திமுக அமைப்பாளர் சுப்பிரமணியனை சந்தித்து வேட்பாளர் நாஜிமுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். புதுவையில் வசிக்கும் பழங்குடியின மக்களை மத்திய அரசின் அட்டவணைப்பட்டியலில் சேர்ப்போம் என திமுக உறுதி கூறியுள்ளது. அதன்படி நாங்கள் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தந்து பிரசாரம் செய்வோம் என கடிதம் அளித்துள்ளனர்.

  தொமுச செயலர் பிராங்ளின் பிரான்சுவா, ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் அன்புசூரியன், இயக்க நிர்வாகிகள் குமார், ஆறுமுகம், ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai