சுடச்சுட

    

    புதுவை அருகே வீட்டில் தூங்கியிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் செயினைப் பறித்துச் சென்றனர்.

    புதுவை அருகே பாகூர் இருளன்சந்தைப் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். புதுவை அரசு மருத்துவமனை ஊழியர். இவரது மனைவி பிரியா (25). இவர்கள், வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கியுள்ளனர்.

    அப்போது வீட்டின் கதவு திறந்திருந்ததாகத் தெரிகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் வந்த மர்ம நபர்கள், பிரியா அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துச் சென்றுள்ளனர்.

    இது குறித்து புகாரின் பேரில், பாகூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai