சுடச்சுட

    

    தேர்தல் வாகனச் சோதனையில் கன்டெய்னர் லாரிகள் சிக்கின

    By புதுச்சேரி,  |   Published on : 05th April 2014 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் தேர்தல் வாகனச் சோதனையின் போது பர்மிட் இல்லாமல் வந்த 5 கன்டெய்னர் லாரிகளை வெள்ளிக்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    மக்களவைத் தேர்தலையொட்டி கடத்தல், பரிசுப்பொருள் எடுத்துச் செல்வதை தடுக்கும் வகையில், புதுவை உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீஸார் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனச் சோதனை நடத்தினர்.

    கடலூர் சாலையில் சுதேசி மில் அருகே சோதனை நடத்தியபோது, அவ்வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த 5 கன்டெய்னர் லாரிகளை ஆய்வு செய்தனர்.

    சென்னையிலிருந்து மூலப் பொருள்களை ஏற்றிக் கொண்டு, கடலூரில் உள்ள தனியார் பவர் பிளாண்ட் நிறுவனத்துக்கு அந்த லாரிகள் செல்வது தெரியவந்தது. லாரியில் இருந்த மூலப் பொருள்களுக்கான ஆவணங்களை அவர்கள் வைத்திருந்தனர்.

    மேலும் ஆய்வு செய்தபோது, புதுவை மாநிலம் வழியாக கன்டெய்னர் லாரிகள் செல்வதற்கு உரிய உரிமத்தை (பர்மிட்) அவர்கள் வைத்திருக்கவில்லை என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து, உரிமமின்றி வந்த 5 கன்டெய்னர் லாரிகளையும் பறிமுதல் செய்த புதுவை உருளையன்பேட்டை போலீஸார், அவர்களை புதுவை போக்குவரத்துத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து போக்குவரத்துத் துறையினர் (ஆர்டிஓ) விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட கன்டெய்னர் லாரிகள் வெள்ளிக்கிழமை மறைமலை அடிகள் சாலையில் (உருளையன்பேட்டை காவல் நிலையம் எதிரே) வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai