சுடச்சுட

  

  புதுச்சேரியில் பாமக வேட்பாளர் அனந்தராமனுக்கு ஆதரவு தர இந்திய ஜனநாயகக் கட்சி முடிவு செய்துள்ளது.

  அக்கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் புதுவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில அமைப்பாளர் ச.சத்தியவேல் தலைமை வகித்தார். செயல் தலைவர் ஜெகன், பொருளாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேந்தர் பேரவை அமைப்பாளர் சேகர், நிர்வாகிகள் மகேஷ், கிருஷ்ணா, ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  இக் கூட்டத்தில் இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அங்கு அவரது கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பாடுபட்டு வருகின்றனர்.

  6 பேரவைத் தொகுதிகளிலும் பாமக நிர்வாகிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

  இந்நிலையில் புதுவையில் நாங்கள் பாரிவேந்தர் ஒப்புதலோடு பாமக வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். அவருக்காக தேர்தல் பணியாற்றுவோம் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  இந்திய ஜனநாயகக் கட்சி தேர்தல் பணிக்குழுத் தலைவராக மாநில அமைப்பாளர் சத்தியவேல், உறுப்பினர்களாக ஜெகன், சண்முகம், சேகர், துரைபாட்சான், மணவாளன், கிருஷ்ணா ஆகியோரும் செயல்படுவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai