சுடச்சுட

  

  புதுச்சேரி தொகுதியில் 4 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல்

  By புதுச்சேரி,  |   Published on : 05th April 2014 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 4 சுயேச்சைகள் வெள்ளிக்கிழமை தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 18 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

  புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் கடந்த 29-ம் தேதி தொடங்கியது.

  வெள்ளிக்கிழமை சுயேச்சை வேட்பாளர்கள் பி.தன்ராசு, பி.பாக்கியராஜ், ராமமூர்த்தி, ஜி.கவுரி சங்கர் ஆகிய 4 பேர் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, மனு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை வெள்ளிக்கிழமையுடன் 18 ஆனது.

  இவர்கள் அனைவரும் மாவட்டத் தேர்தல் அதிகாரி சுபா.தீபக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai