சுடச்சுட

    

    காரைக்கால் அருகே மேலகாசாக்குடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

    இக்கோயில் குடமுழுக்கு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. குடமுழுக்கு நடந்து ஓராண்டு முடிவடைந்ததை முன்னிட்டு சம்பத்ரா அபிஷேகம் நடத்தப்பட்டது. கோயிலில் யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, புனித நீரைக் கொண்டு சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இரவு தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஐதீக முறைப்படி திருக்கல்யாண நிகழ்ச்சிகளாக வரிசை எடுத்து வருதல், பரிசம், மாலை மாற்றுதல், திருமாங்கல்யதாரணம், தேங்காய் உருட்டும் வாரணமாயிரம் பாசுரம் படித்தல் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

    ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். கோவில் தனி அதிகாரி மற்றும் உபயதாரர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai