சுடச்சுட

  

  விடுபட்ட மீனவர்களுக்கு வீடுகள் கட்ட மானியம்

  By புதுச்சேரி,  |   Published on : 05th April 2014 04:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுனாமியால் பாதிக்கப்பட்டு விடுபட்ட மீனவர்களுக்கு வீடுகள் கட்ட உலக வங்கி உதவியுடன் மானியம் வழங்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி உறுதி கூறியுள்ளார்.

  என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து ராஜ்பவன் தொகுதிக்குள்பட்ட குருசுகுப்பத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

  சுனாமி பேரலையால் புதுவை மாநில மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பலர் உயிரிழந்தனர். வீடுகள், படகுகள், உடமைகள் சேதமடைந்தன. சுனாமி சம்பவத்தின்போது நான் முதல்வராக இருந்தேன். எவ்வளவு விரைவாக நிவாரண உதவி செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். வீடுகளை இழந்தோருக்கு நிவாரணத் தொகை வீடுகள் கட்ட ரூ.2.8 லட்சம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் மீனவர்களுக்குத் தேவையான நிலம் இல்லாததால் வீடுகளை கட்டித் தர முடியவில்லை.

  அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நாராயணசாமி எந்த உதவியும் செய்யவில்லை.

  உலக வங்கி உதவியுடன், விடுபட்ட மீனவர்களுக்கு வீடுகள் கட்ட மானியம் வழங்கப்படும்.

  தானே புயல் வீசிய போதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் ரூ.125 கோடி கோரினோம். ஆனால் குறைந்த தொகையே மத்திய அரசு ஒதுக்கியது. இதற்கு காரணம் நாராயணசாமி தான்.

  பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க நாங்கள் தயாராக இருந்த போதும், கணக்கெடுப்பு நடத்தி தான் வழங்க வேண்டும் என மத்திய உள்துறையிடம் கூறி விட்டார். இதனால் மக்களுக்கு முழுமையான நிவாரணத் தொகை வழங்க முடியவில்லை.

  பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணத் தொகையாக மத்திய அரசு வெறும் ரூ.5 ஆயிரத்தை நிர்ணயித்தது. மீனவர்களின் பிரச்னைக்கும் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தான் காரணம்.

  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைய உள்ளது.புதுவை மாநிலத்துக்கு அதிக உதவிகள் கிடைக்கும்.

  என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றார் ரங்கசாமி.

  இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் விஸ்வேஸ்வரன், சாமிநாதன், என்.ஆர். காங்கிரஸ் பொதுச் செயலர் பாலன், தொகுதி பொறுப்பாளர் அனிபால் நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai