சுடச்சுட

  

  ஸ்ரீ பத்மாவதி தாயார் ஆன்மிக வழிபாட்டு மன்ற நூல் வெளியீட்டு விழா

  By புதுச்சேரி,  |   Published on : 05th April 2014 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி ஸ்ரீ பத்மாவதி தாயார் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில் நூல் வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை காந்தி சாலை வரதராஜபெருமாள் கோவிலில் நடக்கிறது.

  இது தொடர்பாக உபாசகர் இரா.விஷ்ணுதாசன் கூறியதாவது:

  எங்கள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில் ஆண்டுதோறும் வைணவ நூல்களை இலவசமாக வெளியிட்டு வருகிறோம். இதுவரையில் 12-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளோம்.

  "நடப்பாண்டு என்னை உன்னுள் வைத்தாய்' என்ற புதிய நூலை வெளியிடுகிறோம். ஸ்ரீமத் நாராயணனின் திவ்யகல்யாண குணாதியசங்கள் குறித்து கூறும் நூலாகும். ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நூல் வெளியீட்டு விழா நடக்கிறது என்றார் விஷ்ணுதாசன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai