சுடச்சுட

    

    100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நாளை விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

    By புதுச்சேரி  |   Published on : 05th April 2014 04:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வரும் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தப்படுகிறது.

    புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம், "தேர்தலில் மாணவர்கள் பங்கு' என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பு அமைப்பாளர் சீ.க.சுவாமிநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் விக்னேஷ்குமார், மகளிர் அணித் தலைவி பானு, சிபி, வாகினி, சிந்து, ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தியும், வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை விளக்கியும் ஞாயிற்றுக்கிழமை கடற்கரை காந்தி சிலையில் மனித சங்கிலி நடத்த வேண்டும். தெருமுனை நாடகங்கள் நடத்த வேண்டும், தேர்தலின் போது வாக்குகளை வாங்கவோ, விற்கவோ முயலும் நபர்களை தேர்தல் ஆணையத்துக்கு மாணவர்கள் அடையாளம் காட்ட வேண்டும்.

    தனியார் கல்விக் கட்டண உயர்வு, கல்வி உரிமைச் சட்டம் அமுல்படுத்தாதது, ஆதிதிராவிட இன மாணவர்களுக்கு தரமான விடுதிகள் கட்டப்படவில்லை, சென்டாக் கல்விக் கட்டணம் வழங்காமல் மாணவர்களை அலைக்கழித்தது தொடர்பாக என்.ஆர். காங்கிரஸ் அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டும். தனியார் கல்லூரிகளைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அரசு கல்லூரிகள் மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும். தனித் தமிழ் ஈழம், பொது வாக்கெடுப்பையும் எதிர்க்கும் மதவாத அரசியல் கட்சிகளை எதிர்த்து பிரசாரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai