சுடச்சுட

  

  அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் அறைக்கு தீ வைப்பு

  By புதுச்சேரி,  |   Published on : 06th April 2014 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அறைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் அறையிலிருந்த ஆவணங்கள், இலவச சைக்கிள்கள் உள்ளிட்டப் பொருள்கள் எரிந்து சேதமாயின.

  புதுவை அருகே திருபுவனை காவல் நிலையம் எதிரே அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் எல்கேஜி முதல் 10-ம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

  வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து ஆசிரியர்கள், வகுப்புகள் மற்றும் அலுவலர் அறைகளின் கதவுகளை மூடிவிட்டுச் சென்றனர். இதன் பின்னர் இரவு மர்ம நபர்கள் தலைமை ஆசிரியரின் அறையில் தீவைத்துச் சென்றதாகத் தெரிகிறது.

  இது குறித்து அங்கு புதிய கட்டட கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், பள்ளி உதவியாளர் விநாயகம் மற்றும் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

  இந்த விபத்தில் அறையிலிருந்த ஆவணங்கள், மாணவர்களின் தேர்ச்சி அட்டைகள், இலவச சைக்கிள்கள் உள்ளிட்டப் பொருள்கள் சேதமடைந்தன.

  இது குறித்த புகாரின் பேரில், திருபுவனை போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai