சுடச்சுட

    

    இந்திய கம்யூ. வேட்பாளருக்கு ஆதரவாக காரைக்காலில் வாக்குச் சேகரிப்பு

    By காரைக்கால்,  |   Published on : 06th April 2014 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மக்களவைத் தொகுதியில் இடதுசாரிகள் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான ஆர். விஸ்வநாதனுக்கு ஆதரவாக அக்கட்சி நிர்வாகிகள் காரைக்காலில் சனிக்கிழமை வாக்குச் சேகரித்தனர்.

    காரைக்காலில் அரசலாறு பாலம் முதல் திருநள்ளாறு சாலை - பாரதியார் சாலை சந்திப்பு வரையிலான பகுதிகளில் வியாபாரிகளிடம் கட்சி நிர்வாகிகள் பிரசாரம் மேற்கொண்டனர்.

    பிரசாரத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுவை மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பி. தங்கராசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காரைக்கால் வட்ட செயலர் அ. வின்சென்ட் ஆகியோர் கூறியது: மக்களின் பிரச்னைகளுக்காக கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமே பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். வேட்பாளர் விஸ்வநாதன் தேர்வு செய்யப்பட்டால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்துப் பிராந்தியங்களின் சமநிலை வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார். புதுவை மக்கள் மாற்றத்தை விரும்பி கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரிப்பார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai