சுடச்சுட

    

    என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி

    By புதுச்சேரி,  |   Published on : 06th April 2014 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியை அடுத்த கூனிச்சம்பட்டு அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை முதலுதவி பயிற்சி முகாம் அளிக்கப்பட்டது.

    என்.எஸ்.எஸ். சார்பில் 7 நாள்கள் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பல்துறை மருத்துவ நிபுணர்கள் முதலுதவி சிகிச்சை குறித்து பயிற்சி அளித்தனர்.

    டாக்டர் ராஜாராம் மருத்துவக் குழுவினருக்கு தலைமை வகித்தார். பொது அறுவை சிகிச்சை நிபுணர் சரவணகுமார், பல் மருத்துவர் கார்த்திகைவேலன், கண் மருத்துவர் ரத்னகுமார், .

    எலும்பு மூட்டு மருத்துவர் விஜயகுமரன், காது, மூக்கு தொண்டை நிபுணர் வெங்கட்ரமணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் புஷ்பேந்திரன், என்.எஸ்.எஸ். அலுவலர் கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai