சுடச்சுட

  

  காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், திமுக, பாமக வேட்பாளர்கள் மனு தாக்கல்

  By புதுச்சேரி,  |   Published on : 06th April 2014 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ், திமுக, பாமக வேட்பாளர்கள் சனிக்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். மனு தாக்கல் செய்ய இவர்கள் கட்சியினருடன் ஊர்வலமாக வந்ததால், புதுவை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  புதுச்சேரி தொகுதியில் ஏற்கெனவே அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இறுதி நாளான சனிக்கிழமை, முக்கியக் கட்சிகளான காங்கிரஸ், என்ஆர்.காங்கிரஸ், திமுக, பாமக வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.

  காலை 10.30க்கு மணிக்கு காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் படங்களுக்கு வேட்பாளர் வி.நாராயணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சியினருடன் ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகம் வந்தார். பின்னர் தேர்தல் அலுவலர் தீபக்குமாரிடம் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், எம்.எல்.ஏக்கள் வைத்திலிங்கம், மல்லாடி கிருஷ்ணாராவ், வல்சராஜ், நமச்சிவாயம், திருமுருகன், லட்சுமிநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

  இதேபோல் கோரிமேடு அப்பாபைத்தியம் சுவாமி கோயிலில் முதல்வர் ரங்கசாமி பூஜை செய்துவிட்டு அங்கிருந்து நேராக ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வந்தார். முதலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். பொதுச் செயலர் வி.பாலன் அமைச்சர்கள் பெ.ராஜவேலு, என்.ஜி. பன்னீர்செல்வம், மு.சந்திரகாசு, தி.தியாகராஜன், எம்எல்ஏக்கள், வாரியத் தலைவர்கள், நிர்வாகிகள் உடன் சென்றனர்.

  இதைத் தொடர்ந்து பாமக வேட்பாளர் அனந்தராமன் கட்சி ஆலோசகர் ராமகிருஷ்ண கவுண்டர் மற்றும் நிர்வாகிகளுடன் ஊர்வலமாகச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

  திமுக வேட்பாளர் நாஜிம் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து ஆட்சியர் தீபக்குமாரிடம் மனு தாக்கல் செய்தார். மாநில அமைப்பாளர் சுப்பிரமணியன், மாநில மாணவரணிச் செயலர் இள.புகழேந்தி, முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன், பொருளாளர் அனிபால் கென்னடி, முன்னாள் எம்எல்ஏ இரா.சிவா, துணை அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார், ராஜாராமன் ஆகியோர் உடன் சென்றனர்.

  போக்குவரத்து நெரிசல்: என்.ஆர்.காங்கிரஸார் மட்டும் ஆட்சியர் அலுவலகத்தின் இடது புறமாக வந்தனர். மற்றக் கட்சிகளான காங்கிரஸ், திமுக, பாமகவினர் ஊர்வலமாக அலுவலகத்தின் வலப்புறம் வந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. வேட்பாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் மனு தாக்கல் செய்ய அலுவலகத்துக்குள் சென்று விட்டனர்.

  பைக்கில் சென்ற நாராயணசாமி: அப்போது 100 மீட்டர் எல்லையில் காங்கிரஸ், பாமக, திமுக தொண்டர்கள் திரளாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சர் நாராயணசாமி வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு திரும்பிச் செல்ல முடியவில்லை. இதனால் அவர் தொண்டர் ஒருவரது பைக்கில் கட்சி அலுவலகத்துக்குச் சென்றார். வேட்புமனு தாக்கல் செய்த அனைவரும் உடனடியாக தங்களின் பிரசாரத்தை துவக்கினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai