சுடச்சுட

  

  காரைக்காலில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகைகள் பறிமுதல்

  By காரைக்கால்  |   Published on : 06th April 2014 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்காலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 2 கார்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

  காரைக்கால் வரிச்சிக்குடி பகுதியில் துணை வட்டாட்சியர் மாசிலாமணி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர், சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரில் சங்கிலி, வளையல், தோடு உள்ளிட்ட பல்வேறு வகையிலான நகைகள் இருந்தது சோதனையில் தெரிய வந்தது. இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் விசாரித்தபோது, அவை கவரிங் நகைகள் என்றும், நாகை, திருவாரூர் மாவட்டத்தில் வியாபாரத்திற்கு கொண்டு சென்றுவிட்டு, சிதம்பரத்திற்கு திரும்பிக் கொண்டிருப்பதாக கூறினர்.

  உரிய ஆவணங்கள் இல்லாததால், கவரிங் நகைகள் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

  இதேபோல், நண்டலாறு சோதனை சாவடி அருகே நடந்த சோதனையில் மற்றொரு காரில் இதுபோன்ற நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றையும் பறிமுதல் செய்து மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

  நகைகளை கூடுதல் ஆட்சியர் எல். முகமது மன்சூர் பார்வையிட்டார். மேலும், பரிசோதனையில் பறிமுதல் செய்யப்பட்டவை கவரிங் நகைகளே என்பது உறுதியானது. இரண்டு காரிலும் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சுமார் ரூ. 4 லட்சம் மதிப்புடையது என்பது தெரிய வந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai