சுடச்சுட

  

  தட்சணமுத்து மாரியம்மன் கோயிலில் முளைப்பாலிகை திருவிழா தொடக்கம்

  By காரைக்கால்,  |   Published on : 06th April 2014 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் ஸ்ரீ தட்சணமுத்து மாரியம்மன் கோயிலில் முளைப்பாலிகைத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

  காரைக்கால் சேணியர் குளத்து வீதியில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் முளைப்பாலிகை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

  கோயிலில் வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்று, இரவு திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது. சுமார் 400 பக்தர்கள் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டனர். இதையொட்டி முன்னதாக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. சனிக்கிழமை ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது.

  தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காவடி, வரும் செவ்வாய்க்கிழமை அம்பாள் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக, சனிக்கிழமை (ஏப். 12) அம்பாளுடன் பக்தர்கள் முளைப்பாலிகை சுமந்து அரசலாற்றில் தீர்த்தம் கொடுக்க செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  ஏப். 14-ம் தேதி திங்கள்கிழமை

  ஸ்ரீ தட்சணமுத்து மாரியம்மன்,

  ஸ்ரீ நடனகாளியம்மன் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai