சுடச்சுட

  

  தந்தை பெரியார் திராவிடர் கழகம் தேர்தல் பிரசாரம்

  By புதுச்சேரி,  |   Published on : 06th April 2014 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்காக தேர்தல் பிரசாரம் செய்யப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

  இது தொடர்பாக புதுச்சேரி பிரிவுத் தலைவர் வீரமோகன், துணைத் தலைவர் ம.இளங்கோ மாநிலச் செயலர் செ.சுரேஷ் ஆகியோர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 30-ம் தேதி சென்னையில் எங்கள் அமைப்பின் தலைமைப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

  இக் கூட்டத்தில் தமிழர் விரோதப்போக்கை கடைபிடிக்கும் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க பிரசாரம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

  அதன்படி புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்கும் வகையில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய உள்ளனர். வரும் 12-ம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறோம்.

  காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்கு செய்துள்ள துரோகம், உழைக்கும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள், புதுவை மக்களுக்கு இழைத்த அநீதிகள் தொடர்பாக பொதுமக்களிடம் பிரசாரம் செய்வோம்.

  காங்கிரசுக்கு வாக்களிக்காதீர் என்ற தலைப்பில் பிரசாரம் செய்ய உள்ளோம் எனத் தெரிவித்தனர்.

  இந்நிகழ்ச்சியின் போது நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai