Enable Javscript for better performance
தமிழகம், புதுச்சேரி கடலோர பாதுகாப்புப் படை கூட்டு ரோந்து- Dinamani

சுடச்சுட

    

    தமிழகம், புதுச்சேரி கடலோர பாதுகாப்புப் படை கூட்டு ரோந்து

    By புதுச்சேரி,  |   Published on : 06th April 2014 04:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடாளுமன்றத் தேர்தல் எதிரொலியாக தமிழகம், புதுச்சேரி கடலோர பாதுகாப்புப் படை சார்பில் கூட்டு ரோந்து மேற்கொள்ளப்படும் என புதுச்சேரி டிஜிபி ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

    தமிழகம், புதுச்சேரி கடலோர பாதுகாப்புப் படைகளின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

    தமிழக கூடுதல் டிஜிபி சி.சைலேந்திரபாபு, டிஎஸ்பி பாலசுப்பிரமணியம், ஆய்வாளர் சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி தரப்பில் டிஜிபி காமராஜ், சீனியர் எஸ்.பி. ஓம்வீர் சிங் பிஷ்னாய், எஸ்.பி. நந்தகோபால், இன்ஸ்பெக்டர் மாறன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இக் கூட்டம் தொடர்பாக டிஜிபி காமராஜ் கூறியதாவது:

    நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏற்கெனவே தமிழகத்தின் மத்திய, வடக்கு மண்டல ஐ.ஜி.க்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினோம். மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் வைத்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புதுவையில் 24 சிறப்பு பறக்கும் படைகளும், காரைக்காலில் 5 பறக்கும் படைகளும் இதில் ஈடுபட்டுள்ளன.

    கடலோர கூட்டு ரோந்து: தமிழகம், புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் பண நடமாட்டம், மதுபானம் கடத்தல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் இரு கடலோர காவல்படைகள் சார்பில் கூட்டு ரோந்து நடத்தப்படும். இந்திய கடலோரக் காவல் படையுடன் சேர்ந்து பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்வோம்.

    மேலும் கடலோரக் காவல் படையில் கூடுதல் காவலர்களை நியமிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காக ஏற்கெனவே 4 கம்பெனி மத்திய ஆயுத போலீஸ் படைகள் வந்துள்ளன. மேலும் சில கம்பெனி படையினர் அனுப்பப்படுவர் எனவும் எதிர்பார்க்கிறோம்.

    ஏனாம், மாஹே பிராந்தியங்களிலும் தேர்தல் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு கோதாவரி மாவட்ட எஸ்.பி., கேரள மாநில காவல்துறையுடன் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்து கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றார் காமராஜ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai