சுடச்சுட

    

    புதுவையில் தனியார் தங்கும் விடுதி 4-வது மாடியிலிருந்து குதித்து துணிக்கடை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

    தூத்துக்குடி மொய்தீன்கான் பள்ளி தெற்கு வீதியைச் சேர்ந்த சையதுமுகமதுகான் மகன் அப்துல்காதர் (35). இவர், புதுவை அண்ணாசாலையில் உள்ள துணிக்கடையில் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

    இவர் கோவிந்தசாலை சுப்பிரமணி வீதி தனியார் தங்கும் விடுதியில் சக ஊழியர்களுடன் தங்கியிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அவர், 4-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

    இது குறித்த புகாரின் பேரில், புதுவை பெரியகடை சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீஸார் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai