சுடச்சுட

  

  பாமக தனியாக வேட்பு மனு தாக்கல்:புதுச்சேரி பாஜக கூட்டணியில் பிளவு

  By புதுச்சேரி,  |   Published on : 06th April 2014 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாமக தனியாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரி பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாகி விட்டது.

  மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை முடிந்து விட்டது. தமிழகத்தில் கூட்டணி முடிவாகி பிரசாரம் நடந்து வருகிறது. ஆனால் புதுச்சேரியில் கூட்டணி முறிந்து பிளவுபட்டுள்ளது. பாஜக அணியில் இடம் பெற்றுள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், பாமகவும் பிரசாரம் செய்து வருகின்றன.

  சனிக்கிழமை என்.ஆர்.காங்கிரஸ் வேட்புமனு தாக்கலின்போது முதல்வர் ரங்கசாமியுடன் பாஜக மாநிலத் தலைவர் விஸ்வேஸ்வரன் வந்திருந்தார். பாமக வேட்புமனு தாக்கலில் பாஜக சார்பில் யாரும் வரவில்லை. இருப்பினும் பாமகவின் பிரசார வேனில் நரேந்திர மோடியின் படம் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிகவில் ஒரு பகுதியினர், மதிமுக ஆகிய கட்சிகள் பாமகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

  காங்கிரஸýக்கு புதிய நீதிக்கட்சி ஆதரவு: மேலும் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி, புதுச்சேரியில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநில புதிய நீதிக்கட்சித் தலைவர் பொன்னுரங்கம், காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியுடன் மனு தாக்கலுக்கு வந்து கூட்டணி முறிவை உறுதிப்படுத்தினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai